Tamil Wiki
Register
Advertisement

அர்த்தவியல் File:அர்த்தவியல்.pdf

என் அன்பு சகோதர, சகோதரிகளே,
இன்றைய கல்விமுறையை எளிமைப்படுத்தவும், கல்விக் கட்டணத்தை குறைக்கவும், இன்றைய கல்வியின் தரத்தை மேம்படுத்தவும் தாங்கள் எடுத்த முயற்சிகள் அனைத்தையும் உலகறியும். தாங்கள் எடுத்த முயற்சிகள் யாவும் தோல்வியில் முடிந்தன என்பதையும் உலகறியும். எதுவாயினும் அதனைப்பற்றி அறிவுபெறும் முறையை அறியாமல், கல்விமுறையை மேம்படுத்த தாங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் தோல்வியில்தான் முடியும்.

சிந்தித்து பாருங்கள். எதுவாயினும் அதனைப்பற்றி அறிவுபெறும் முறையை தாங்கள் அறிந்திருந்தால், அறிவுபெறுவதற்காக கட்டணம் செலுத்துவீர்களா? சுயமாக அறிவுபெற முயற்சி செய்திருக்கமாட்டீர்களா? அறிவுபெறும் முறையறிய இருபதுமுப்பது வருடங்களை பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் கல்வி என்ற பெயரில் வீணடிப்பீர்களா? எதுவாயினும் அதனைப்பற்றி அறிவுபெறும் முறையை தாங்கள் அறிந்திருந்தால், சகமனிதர்களை 'அறிவால் உயர்ந்தவர்கள்,' 'சிந்தனைச் சிற்பிகள் ', 'கல்வித் தந்தைகள்', எனப் போற்றுவீர்களா? ஒரு சில சமூககுலத்தோரை 'அறிவால் உயர்ந்தவர்கள்' எனவும், மற்ற சமூககுலத்தோரை 'அறிவால் தாழ்ந்தவர்கள்' எனவும் பிரித்து, சகமனிதர்களை இழிவுபடுத்தி பேசும் மூடப்பழக்கம் உங்களுக்கு வந்திருக்குமா? அமெரிக்காவிலும், லண்டனிலும் பிறந்தவர்களை உயர்ந்த அறிவாளிகள் எனவும், தமிழகத்தில் பிறந்தவர்களை முட்டாள்கள் எனவும் எண்ணி எள்ளி நகையாடும் மூடப்பழக்கம் உங்களைப் பீடித்திருக்குமா? எதுவாயினும் அதனைப்பற்றி அறிவுபெறும் முறையை தாங்கள் அறிந்திருந்தால், பல்கலைக்கழகங்களில் பல பட்டங்களை வாங்கியவர்கள்தான் சமூக நிர்வாகப் பதவிகளுக்குத் தகுந்தவர்கள் என எண்ணும் மூட நம்பிக்கை உங்களை ஆட்டிபடைத்திருக்குமா? பதவியில் இருப்பவர்கள் எல்லாம் நம்மைவிட உயர்ந்த அறிவாளிகள் என எண்ணி அவர்களிடம் அடிபணியும் மூடப்பழக்கம் உங்களுக்கு வந்திருக்குமா? அறிவு, மொழி, மதம், ஜாதி, அறிவாளி, சிந்தனை என்ற பெயர்களில் நடக்கும் மனிதகுலத்துரோக செயல்களுக்கு துணை நின்றிருப்பீர்களா? எதுவாயினும் அதனைப்பற்றி அறிவுபெறும் முறையைக்கூட அறிந்திராத கயவாளிகள்தான் தங்களுக்கு அறிவுப்பால் கொடுக்கும் ஆசிரியர்கள்போல் நடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை உணர்ந்திருக்கமாட்டீர்களா? எதுவாயினும் அதனைப்பற்றி அறிவுபெறும் முறையை தாங்கள் அறியாமல் இருப்பதே, தங்கள் அறியாமையே, இன்றைய மனித சமூகத்தில் தினந்தினம் அரங்கேறும் லஞ்ச, லாவண்யங்களுக்கும், ஏமாற்றங்களுக்கும், சீரழிவுகளுக்கும், மற்றும் பல மனிதகுலத்துரோக செயல்களுக்கும் மூலகாரணமாகும்.

எதுவாயினும் அதனைப்பற்றி அறிவு பெறுவது எப்படி? இந்தக் கேள்வியைக் கல்வி என்ற பெயரில் 12 வருடங்களைப் பள்ளிகளிலும், ஐந்து வருடங்களை கல்லூரிகளிலும், ஆராய்ச்சி என்ற பெயரில் மேலும் ஐந்து வருடங்களை பல்கலைக்கழகங்களிலும் கழித்த எவரிடம் கேட்டாலும், ‘தெரியாது’ என்ற பதில்தான் வரும். தமிழ்நாடு பற்றி அறிவு பெறுவது எப்படி, சென்னை பற்றி அறிவு பெறுவது எப்படி, உலகம் பற்றி அறிவு பெறுவது எப்படி, அணுக்களைப் பற்றி அறிவு பெறுவது எப்படி, மனிதர்களைப் பற்றி அறிவு பெறுவது எப்படி, பூக்களைப் பற்றி அறிவு பெறுவது எப்படி, சிங்கத்தைப் பற்றி அறிவு பெறுவது எப்படி, . . . , மனித உடல் பற்றி அறிவு பெறுவது எப்படி என்ற ரீதியில் கேட்கப்படும் எக்கேள்விக்கும், ‘தெரியாது’ என்ற பதில்தான் இவர்களிடமிருந்து வரும். இக்கேள்விகள், அறிவுபெறும் முறையை ஒருவர் அறிந்திருக்கிறரா என்பதை சோதிக்கும் கேள்விகளாகும். சோதித்துப் பார்த்தால், கல்வி என்ற பெயரில் காலத்தை கழிப்பவர்கள், எதுவாயினும் அதனைப் பற்றி அறிவுபெறும் முறையைக்கூட கற்பதில்லை என்பது நமக்கு புலனாகும். எதுவாயினும் அதனைப்பற்றி அறிவுபெற அதன் பாகங்கள், தனித்துவம், தொடர்புகள், தாக்கங்கள், நிலைப்பு, பயன்கள், மற்றும் மாற்றுகளனைத்தையும் காணவேண்டும். மாணவர்கள் ஆசிரியகளிடமிருந்து கற்கவேண்டிய விஷயம் இதுமட்டும்தான். ஆசிரியர்கள் மாணவர்களுக்கு விரிவாக பல எடுத்துக்காட்டுகளுடன் விளக்கவேண்டிய விஷயமும் இதுதான், வேறு எதுவுமில்லை. எடுத்துக்காட்டாக, கத்தரிக்காயின் பாகங்கள், தனித்துவம், தொடர்புகள், தாக்கங்கள், நிலைப்பு, பயன்கள், மற்றும் மாற்றுகளனைத்தையும் கண்டறிந்தால்தான், கத்தரிக்காய் பற்றி நாம் முழு அறிவு பெறமுடியும். மனித உடலின் பாகங்கள், தனித்துவம், தொடர்புகள், தாக்கங்கள், நிலைப்பு, பயன்கள், மற்றும் மாற்றுகளனைத்தையும் கண்டறிந்தால்தான், மனித உடல் பற்றி நாம் முழு அறிவு பெறமுடியும். உலகின் பாகங்கள், தனித்துவம், தொடர்புகள், தாக்கங்கள், நிலைப்பு, பயன்கள், மற்றும் மாற்றுகளனைத்தையும் கண்டறிந்தால்தான், உலகம் பற்றி நாம் முழு அறிவு பெறமுடியும். இதேரீதியில், ஒவ்வொன்றாக சோதித்து பார்த்தால்தான், எதெதைப்பற்றி நம்மிடம் முழுமையான அறிவிருக்கிறது என்பதை நம்மால் பட்டியலிடமுடியும். பட்டியலிட்டுப் பார்த்தால்தான், முழுமையாக எதையும் நாம் அறிந்திருக்கவில்லை என்பதை நம்மால் உணரமுடியும். தங்களுக்குத்தான் எல்லாம் தெரியுமெனத் தம்பட்டம் அடிக்கும் ஆசிரியக்கூட்டம் இப்படிப் பட்டியலிடுவதை ஏற்றுக்கொள்ளாது. கற்றுக்கொள்ள, கற்றுக்கொடுக்க கோடானகோடி விஷயங்கள் இருக்கிறது என வரிந்துகட்டிக்கொண்டு மார்தட்டும். இக்கூட்டத்திடம் நமக்கு கற்றுக்கொடுக்கவிருக்கும் கோடானகோடி விஷயங்களையும் வகைப்படுத்தி பட்டியலிடச் சொல்லுங்கள். வகைப்படுத்திப் பட்டியலிட எந்த ஆசிரியனும் முன்வரமாட்டான், எந்த ஆசிரியையும் முன்வரமாட்டாள். எதுவாயினும் அதனைப்பற்றி அதன் பாகங்கள், தனித்துவம், தொடர்புகள், தாக்கங்கள், நிலைப்பு, பயன்கள், மற்றும் மாற்றுகள் தவிர வேறு எதையும் எந்த மனிதனும் இதுவரை இவ்வுலகிற்கு எடுத்துச் சொல்லியதில்லை என்பதே உண்மை.

Sivashanmugam Awards 2020

எதுவாயினும் அதனைப்பற்றி அறிவுபெறும் முறையை www.tamil.ml என்ற இணைய தளத்தில் பல எடுத்துக்காட்டுகளுடன் காணலாம். அதன் ஆங்கில வடிவம் www.read.ml என்ற இணையதளத்தில் உள்ளது. எதுவாயினும் அதனைப்பற்றி அறிவு பெற சிவஷண்முகம் காட்டியவழி தவறு என நிரூபித்து, எதுவாயினும் அதனைப் பற்றி அறிவு பெற புதியதோர் வழிமுறையை வகுத்துக் கொடுப்போருக்கு நோபல் பரிசுத்தொகை போல் பத்து மடங்கு பரிசுத்தொகையாக 'Sivashanmugam Awards - 2020' அறிவிக்கப்பட்டுள்ளது. எதுவாயினும் அதனைப்பற்றி அறிவுபெற புதியதோர் வழியை வகுத்து கொடுங்கள், பரிசைப் பெற்று செல்லுங்கள்! இது, தனி ஒருவனால் உங்கள் அறிவுக்கு விடப்பட்ட சவாலாகும். நீங்கள் உண்மையான அறிவாளியாக இருந்தால், தனி ஒருவனால் உங்கள் அறிவுக்கு விடப்பட்ட சவாலை முறியடியுங்கள். இல்லையென்றால், தங்களையும் ஓர் அறிவாளி என்று எங்கும் பிரகடனப்படுத்தாதீர்கள்!

எதுவாயினும் அதனைப் பற்றி அறிவு பெறும் முறையை முதலில் அறிந்துகொண்டு இன்றைய கல்விமுறையை எளிமைப்படுத்தவும், இன்றைய கல்வியின் தரத்தை மேம்படுத்தவும், கல்விக் கட்டணத்தைக் குறைக்கவும் முயற்சி எடுங்கள். வெற்றி காண்பீர்கள்!

வாழ்த்துகள்

அன்புடன்
திருச்சிராப்பள்ளி சிவஷண்முகம்

To apply for Sivashanmugam Awards – 2020, write to: director@richmancentre.org

Voice call: +91 9444499818

File:Open Contest.pdf

எதுவாயினும் அதனைப் பற்றி அறிவு பெறுவது எப்படி?

எதுவாயினும் அதனைப் பற்றி அறிவு பெற அதன் பாகங்கள், தனித்துவம், தொடர்புகள், தாக்கங்கள், நிலைப்பு, பயன்கள், மற்றும் மாற்றுகளைப் பார்! பார்த்தால் அறிவு பெறுவாய்!




All Pages in this wiki                   Upload Image                   Create New Article




Disclaimers
All copyrights, trademarks, registered trademarks and service marks mentioned or used on this site are the property of their respective owners and are used under the Fair Use doctrine or for illustration only. We assume no responsibility for the use or misuse of the material on this website. This site reflects biased and personal, subjective, opinions of the authors. You use this website entirely at your own risk.





Latest activity

Read a Random Page

File:User Guide.pdf
File:Open Contest.pdf


Advertisement